
வைரல் வீடியோ: குஜராத்தில் வாக்கிங் போன சிங்கங்கள்
செய்தி முன்னோட்டம்
இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா, குஜராத் தெருக்களில் கேசுலவலாக நடமாடும் ஒரு சிங்க கூட்டத்தின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
குஜராத்தில் ஒரு குடியிருப்பு பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
எட்டு சிங்கங்கள் கொண்ட ஒரு கூட்டம் குஜராத் தெருக்களில் சுற்றித் திரிவதை இந்த வீடியோவில் காணலாம்.
இந்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டு 1 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
இந்த வீடியோவில் மனிதர்கள் யாருமே இல்லையென்றாலும், தூரத்தில் ஏதோ ஒரு வாகனத்தின் லைட்டுகளைக் காண முடிகிறது.
இது குறிப்பாக எந்த பகுதியில் பிடிக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை என்றாலும், காட்டு பகுதிக்கு அருகில் உள்ள ஏதோ ஒரு ஊரில் வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
வைரலான சிங்க கூட்டத்தின் வீடியோ
Another day,
— Susanta Nanda (@susantananda3) February 15, 2023
Another pride…
Walking on the streets of Gujarat pic.twitter.com/kEAxByqPUU