"தேர்தல் பத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டதால் கறுப்பு பணம் அதிகரிக்கும்": நிதின் கட்கரி விளக்கம்
செய்தி முன்னோட்டம்
தேர்தல் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டதனால் கறுப்புப் பணத்திற்கான கதவுகள் திறக்கப்படும் என்றும், சிறந்த அமைப்பை உருவாக்குவது குறித்து அனைத்து கட்சிகளும் சிந்திக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
NDTVவுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் அவர் இந்த தகவல்களை கூறியுள்ளார்.
மறைந்த அருண் ஜெட்லி நாட்டின் நிதி அமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்ட தேர்தல் பத்திரத் திட்டத்தை ஆதரித்து பேசிய நிதின் கட்கரி, "தேர்தலில் போட்டியிட பணம் தேவை என்பது உண்மை ஒரு விஷமாகும். இது ஒவ்வொரு கட்சிக்கும் பொருந்தும்" என்று அவர் கூறியுள்ளார்.
"அரசியல் கட்சிகள் பத்திரங்கள் மூலம் பணம் பெறுவார்கள் என்ற எண்ணத்தில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது." என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா
"அரசியல் கட்சிகளுக்கு கருப்புப் பணம் வரும்": மத்திய அமைச்சர்
"மேலும் நீங்கள் இந்திய பொருளாதாரத்தை முதலிடத்திற்கு முன்னேற்ற விரும்பினால் அந்த திட்டம் பொருளாதாரத்தை உயர்த்தவும் உதவும்" என்று கட்கரி கூறியுள்ளார்.
பொருளாதார வளர்ச்சிக்கான பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியங்களை சுட்டிக்காட்டிய அவர், அந்த திட்டத்தில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.
"தேர்தல் பத்திரங்கள் தடை செய்யப்பட்டாலும், அரசியல் கட்சிகளுக்கு தொடர்ந்து பணம் வரும். ஆனால் என்ன அவை கருப்புப் பணமாக வரும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் ஒரு வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியது.
குடிமக்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதால் இந்த சர்ச்சைக்குரிய தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.