Page Loader
'மக்களவை தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை': அண்ணாமலை அதிரடி அறிவிப்பு 
டெல்லி அரசியலில் பங்குபெற விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

'மக்களவை தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை': அண்ணாமலை அதிரடி அறிவிப்பு 

எழுதியவர் Sindhuja SM
May 21, 2023
06:28 pm

செய்தி முன்னோட்டம்

2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 2024 மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் அண்ணாமலை போட்டியிட இருப்பதாக பல நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. இந்நிலையில் இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, இதை முற்றிலுமாக மறுத்துள்ளார். மேலும், அவர் டெல்லி அரசியலில் பங்குபெற விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

details

அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை. தமிழகத்தில் ஒரு ஆட்சி மாற்றத்தை உருவாக்கவே நான் பாஜகவில் சேர்ந்தேன். கோவை தொகுதியில் நின்று வெற்றி பெற பல திறமையானவர்கள் இருக்கிறார்கள். அவர்களை வெற்றி பெற செய்வதே எனது வேலை. தமிழகத்தின் பாஜக தலைவராக இருந்தாலும், ஒரு தொண்டனாகவே நான் பணியாற்ற விரும்புகிறேன். எந்த காரணத்திற்காகவும், டெல்லி அரசியலுக்கு செல்ல எனக்கு விருப்பமில்லை. தமிழத்தை விட்டு செல்ல என்னால் முடியாது. இந்த மண்ணிலேயே என் அரசியல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என்று கூறியுள்ளார்.