Page Loader
சனாதன தர்மத்தை ஒழிக்க நினைக்கும் எதிர்க்கட்சிகள்; பிரதமர் மோடி நேரடி அட்டாக்
சனாதனம் குறித்த சர்ச்சைக்கு பிரதமர் மோடி பதில்

சனாதன தர்மத்தை ஒழிக்க நினைக்கும் எதிர்க்கட்சிகள்; பிரதமர் மோடி நேரடி அட்டாக்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 14, 2023
02:28 pm

செய்தி முன்னோட்டம்

சனாதன தர்மத்தை ஒழித்து, நாட்டை 1,000 ஆண்டுகள் அடிமைத்தனத்தில் தள்ள விரும்புவதாக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி மீது பிரதமர் நரேந்திர மோடி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். முன்னதாக, திமுகவைச் சேர்ந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசிய பேச்சு இந்திய அளவில் சர்ச்சையானது. இந்தியா கூட்டணியில் உள்ள சில கட்சிகள் கூட, உதயநிதியின் கருத்து இந்தியா கூட்டணியின் கருத்தல்ல எனக் கூறும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. இந்நிலையில், விரைவில் தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேசத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, சனாதன தர்மம் குறித்த சர்ச்சையில் எதிர்க்கட்சிகளை நேரடியாக விமர்சித்துள்ளார்.

pm modi slams opposition for sanatana dharma controversy

பிரதமர் மோடி சனாதனம் குறித்த சர்ச்சைக்கு அளித்த முழு பதில்

சனாதன தர்மம் தொடர்பான சர்ச்சைக்கு பதிலளித்த பிரதமர் மோடி, இந்தியாவின் கலாசாரத்தை தாக்கி, சனாதன கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, எதிர்க்கட்சிகளின் கூட்டணி மறைமுக செயல்திட்டத்தை முடிவு செய்துள்ளதாக கூறினார். சுவாமி விவேகானந்தர், லோகமான்ய திலகர் ஆகியோருக்கு உத்வேகம் அளித்த அந்த சனாதன தர்மத்தை இந்தியா கூட்டணியினர் அழிக்க நினைக்கிறார்கள் என்றும், நாடு முழுவதும் உள்ள அனைத்து சனாதனிகளும் மற்றும் நம் நாட்டை நேசிக்கும் மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், எதிர்க்கட்சி கூட்டணிக்கு தலைவர் இல்லை என்றும், தலைமை குறித்து குழப்பம் நிலவுவதாகவும் அவர் கூறினார்.