Loading...
'திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்த உறவு': பெண் ஐபிஎஸ் அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு
ஐபிஎஸ் அதிகாரி உதய கிருஷ்ணா ரெட்டி

'திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்த உறவு': பெண் ஐபிஎஸ் அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு

எழுதியவர் Venkatalakshmi V
Jul 21, 2026
02:17 pm

செய்தி முன்னோட்டம்

ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் உதய கிருஷ்ணா ரெட்டி, பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் அளித்த பாலியல் தொல்லை மற்றும் தாக்குதல் புகாரை தொடர்ந்து, விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது சக பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த புகாரால் மன உளைச்சலுக்கு ஆளான உதய கிருஷ்ணா ரெட்டி, ஞாயிற்றுக்கிழமை மாலை தனது நண்பரின் வீட்டிற்குச் சென்று விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது. தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

குற்றச்சாட்டுகள்

பெண் ஐபிஎஸ் அதிகாரி சுமத்திய பலத்த குற்றச்சாட்டுகள்

முன்னதாக, 30 வயதான சக பெண் ஐபிஎஸ் அதிகாரி ஹைதராபாத் காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில், BNS மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் உதய கிருஷ்ணா ரெட்டி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அந்த புகாரில், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் உதய கிருஷ்ணா ரெட்டி தன்னைத் தொடர்ந்து பின்தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகவும், வாட்ஸ்அப்பில் தவறான மெசேஜ்களை அனுப்பியதாகவும் குற்றம் சாட்டினார்.

அறைக்குள் பூட்டி வைத்து, முடியைப் பிடித்து இழுத்து, கழுத்தை நெரித்துக் கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும், ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

தன் அனுமதியின்றி தனியாக இருந்த வீடியோவை ரகசியமாகப் பதிவு செய்து, அதைத் தன் கணவருக்கு அனுப்பி மிரட்டியதாகவும் அந்தப் பெண் அதிகாரி தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

வாக்குமூலம்

உதய கிருஷ்ணா ரெட்டியின் வாக்குமூல கடிதம்

கடிதத்தில், பெண் அதிகாரி தன் அறைக்கு வந்து தகராறு செய்ததற்கான வீடியோ ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.

"நாங்கள் இருவரும் 2025 ஜூன் முதல் காதலித்து வந்தோம். அவருக்கு திருமணம் முடிந்த பிறகும் கூட, எங்களது உடலளவிலான மற்றும் மனதளவிலான உறவு தொடர்ந்தது. அவரே எனது அறைக்கு வந்து சண்டையிட்டார். எனது பாதுகாப்பிற்காகவே நான் அதை எனது போனில் வீடியோவாக பதிவு செய்தேன். அவர் தன் மீதான தவறுகளை மறைக்க என் மீது பொய் புகார் அளித்துள்ளார்."

மேலும், ஜூலை 9 அன்று அந்த பெண் அதிகாரி தான் தனது அறைக்கு வந்து தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், அதனாலேயே அந்த வீடியோவைப் பதிவு செய்து அவரது கணவருக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT