Page Loader
குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்
வரும் 12ஆம் தேதி மீண்டும் குஜராத் முதல்வர் பதவியில் அமரப்போகும் பூபேந்திர படேல்

குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்

எழுதியவர் Sindhuja SM
Dec 11, 2022
08:31 pm

செய்தி முன்னோட்டம்

குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் பூபேந்திர படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய ஆட்சி அமைக்கப் போவதால் அதற்கு வசதியாக தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். குஜராத் சட்டசபை தேர்தலில் 182 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 156 தொகுதியைப் பிடித்து பாஜக பெரும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியோ 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. மேலும், ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களையும் சமாஜ்வாதி கட்சி 1 இடத்தையும் சுயேச்சை வேட்பாளர்கள் 3 இடங்களையும் பிடித்து வெற்றி பெற்றிருந்தனர்.

ராஜினாமா

முதல்வர் பூபேந்திர படேல் ராஜினாமா

156 தொகுதிகளைப் பிடித்த பாஜக வரலாற்று வெற்றி பெற்று 7ஆவது முறையாக மாநில ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து, குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் பூபேந்திர படேல் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்திருக்கிறார். புதிய ஆட்சி அமைக்கப் போவதால் அதற்கு வசதியாக தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறாராம். அவர் 12ஆம் தேதி மீண்டும் பதவி ஏற்க உள்ள நிலையில், அதுவரை பதவியில் நீடிக்கும்படி ஆளுநர் பூபேந்திர படேலிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.