
500 போலீசார், 400 கிராமவாசிகள், ட்ரோன்கள்: புனே பாலியல் வன்கொடுமை குற்றவாளி எப்படி பிடிபட்டார்?
செய்தி முன்னோட்டம்
புனேவின் ஸ்வர்கேட் பணிமனையில் ஒரு பேருந்தில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தத்தாத்ரே ராம்தாஸ் காடே என்ற 37 வயது நபர் நீண்ட தேடுதலுக்கு பின்னர் இன்று கைது செய்யப்பட்டார்.
அவர் குற்றம் இழைத்த பின்னர் தலைமறைவாக இருந்த நிலையில், குடிநீர் தேடி ஒரு நபரிடம் அணுகியபோது, அவர் காவல்துறையினரின் இன்ஃபார்மராக மாறியது இந்த வழக்கில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
கிட்டத்தட்ட 500 போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், நாய் படைகள் மற்றும் 400க்கும் மேற்பட்ட கிராமவாசிகளுடன், 75 மணி நேர துரத்தலுக்குப் பிறகு வியாழக்கிழமை இரவு தத்தாத்ரே கைது செய்யப்பட்டதாக புனே உயர் போலீஸ் அதிகாரி அமிதேஷ் குமார் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
தேடுதல் வேட்டை
ட்ரோன்கள் மூலமும் தேடுதல் வேட்டை
குற்றம் சாட்டப்பட்டவரைக் கண்டுபிடிக்க புனே காவல்துறை ட்ரோன்கள் உட்பட ஒரு பெரிய மனித வேட்டையை நடைபெற்றது என போலீஸ் அதிகாரி அமிதேஷ் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடிப்பதில் தாமதம் ஏற்பட்ட போதிலும், தகவல் கொடுத்தவரின் ரகசிய தகவலைத் தொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்குள் அவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக அமிதேஷ் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் காவல்துறைக்கு தகவல் அளித்த நபருக்கு முன்னர் அறிவிக்கப்பட்டபடி ரூ.1 லட்சம் வெகுமதி அளிக்கப்படும்.
மேலும், இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைக்காக ஒரு சிறப்பு காவல் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இது விரைவு நீதிமன்றத்தில் தொடரப்படும் என்றும் அவர் கூறினார்.
சுற்றிவளைப்பு
குற்றவாளியை சுற்றி வளைத்தது எப்படி என காவல்துறை விளக்கம்
"கடந்த மூன்று நாட்களாக நாங்கள் குற்றம் சாட்டப்பட்டவரைத் தேடி வந்தோம். சுமார் 500 காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்... 400 முதல் 500 உள்ளூர் கிராமவாசிகளின் ஆதரவும் எங்களுக்குக் கிடைத்தது. எங்கள் நாய் படை பல இடங்களைக் கண்டறிந்தது, இது குற்றம் சாட்டப்பட்டவரைக் கண்டுபிடிக்க எங்களுக்கு உதவியது. அதிகாலை 1.10 மணிக்கு, நாங்கள் அவரைக் காவலில் எடுத்தோம்," என்று அமிதேஷ்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
"குற்றம் சாட்டப்பட்டவர் இந்த நபரிடம் தண்ணீர் குடிக்க வந்திருந்தார். அவர் அளித்த தகவல்களால், வழக்கின் விசாரணையில் காவல்துறையினர் முன்னேற முடிந்தது," என்று அவர் மேலும் கூறினார்.