புதுச்சேரி-மாகே பள்ளி கல்லூரிகளுக்கு செப்.24 வரை விடுமுறை
கேரளாவின் கோழிக்கோடு நிபா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த மாகேவில் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செப்டம்பர் 24 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோட்டில் இதுவரை 6 பேர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் ஏற்கனவே இறந்துவிட்டனர். கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு எதுவும் புதிதாக பதிவாகவில்லை என்றாலும், நேற்று 5 பேர் கூடுதலாக தனிமைப்படுத்தப்பட்டனர். தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தெரிவித்தார். கோழிக்கோட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் செப்டம்பர் 18 முதல் மறு உத்தரவு வரும் வரை ஆன்லைன் வகுப்புகள் மூலம் செயல்பட உள்ளது.