Page Loader
அழகுக்கு நிறம் கிடையாது: ஹிமாலயாவின் விளமபரத்தால் சர்ச்சை
கருப்பு நிற மாடல்களை போடாமல் நிறத்தை பற்றி விளம்பரம் செய்த ஹிமாலயா

அழகுக்கு நிறம் கிடையாது: ஹிமாலயாவின் விளமபரத்தால் சர்ச்சை

எழுதியவர் Sindhuja SM
Mar 07, 2023
11:57 am

செய்தி முன்னோட்டம்

அழகு சாதன நிறுவனமான ஹிமாலயா சமீபத்தில் ஒரு விளம்பரத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்தது. "அழகுக்கு நிறம் கிடையாது" என்று விளம்பரம் செய்திருக்கும் இந்த வீடியோவால் பெரும் சர்ச்சை கிளம்பி இருக்கிறது. அழகுக்கு நிறம் இல்லை என்று சொல்லும் இந்த வீடியோவில், கருப்பான பெண்கள் யாருமே இல்லை என்பது தான் ட்விட்டர் வாசிகளின் கோபம். சிவப்பான பெண்களையும் மாநிற பெண்களையும் இந்த வீடியோவில் பார்க்க முடிகிறதே தவிர, கருப்பான பெண்கள் இதில் காட்டப்படவில்லை. இதனால் ட்விட்டர் வாசிகள் மட்டுமில்லாமல் சமூக ஆர்வலர்களும் பெண் உரிமை போராளிகளும் கடும் கோபத்தோடு இந்த ட்விட்டர் பதிவில் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், இந்த பதிவு தற்போது வைரலாகி இருக்கிறது.

ட்விட்டர் அஞ்சல்

வைரலாகி வரும் ஹிமாலயாவின் விளம்பரம்