
பக்தர்கள் அதிகம் செல்லும் கோவில் - ஆன்மீக பயணங்கள் குறித்த ஓயோ ஆய்வு
செய்தி முன்னோட்டம்
சமீபத்தில் ஓயோ நிறுவனம் நாடு முழுவதும் ஆன்மீக கலாச்சார பயணங்கள் குறித்த ஆய்வு ஒன்றினை நடத்தியது.
இந்த ஆய்வின் படி, நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற கோயில்களுள் எந்த கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகம் செல்கிறது என்னும் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி, காசி விஸ்வநாதர் கோயில் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து, திருப்பதி தேவஸ்தானம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
பூரி ஜெகந்நாதர், அமிர்தசரஸ் பொற்கோயில் மற்றும் ஹரித்வார் கோயில்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.
2021ம் ஆண்டு கொரோனா பரவலால் கோயில்கள் மூடப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டது.
ஆனால் இவ்வருடம் ஷீரடி, ரிஷிகேஷ், மதுரை, மகா பலேஸ்வர் போன்ற ஆன்மீக நகரங்களும் வளர்ந்து வருகிறது.
ஆண்டுக்கு கிட்டத்தட்ட ரூ.800 கோடி வருமானம் ஈட்டும் திருப்பதி
திருப்பதி தேவஸ்தானம், 16.2 ஏக்கர் பரப்பளவில் அமைந்த கோயில் வளாகம்
ஓயோ நிறுவனத்தில் பக்தர்கள் அறைகள் முன்பதிவு செய்வதை வைத்தும், ஆய்வின் அடிப்படையிலும் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள திருப்பதி கோயில் தரிசனத்திற்கான முன்பதிவு கடந்த ஆண்டை விட இந்தாண்டு 233 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திர மாநிலமான திருப்பதியில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் வாழ்ந்ததாக புராணங்கள் கூறுகிறது.
இதனால் திருப்பதியை வைணவ பக்தர்கள் நிர்வகித்து வந்த நிலையில், காலப்போக்கில் 16.2 ஏக்கர் பரப்பளவில் இக்கோயில் அமைக்கப்பட்டது.
நாள்தோறும் இந்த கோயிலுக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், தரிசன டிக்கெட், லட்டு விற்பனை, காணிக்கை என வருடத்திற்கு கிட்டத்தட்ட ரூ.800 கோடி வருமானத்தை திருப்பதி தேவஸ்தானம் ஈட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.