Page Loader
இனி தங்கும் விடுதிகளில் வழங்கப்படும் சேவைகளுக்கு 12% ஜிஎஸ்டி வரி கட்டாயம்
இனி தங்கும் விடுதிகளில் வழங்கப்படும் சேவைகளுக்கு 12% ஜிஎஸ்டி வரி கட்டாயம்

இனி தங்கும் விடுதிகளில் வழங்கப்படும் சேவைகளுக்கு 12% ஜிஎஸ்டி வரி கட்டாயம்

எழுதியவர் Prasanna Venkatesh
Jul 30, 2023
12:42 pm

செய்தி முன்னோட்டம்

தங்கும் விடுதிகளில் வழங்கப்படும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியது கட்டாயம் என இந்தியாவின் இருவேறு நகரங்களில் இருவேறு வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு கோரி பெங்களூருவைச் சேர்ந்த ஸ்ரீசாய் லக்ஸூரியஸ் ஸ்டே LLP மேற்கொண்ட வழக்கில், பெங்களூரு Authority of Advance Ruling (AAR) தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அந்தத் தீர்ப்பில், 'தங்கும் விடுதிகள் வழங்கும் சேவையை குடியிருப்பு சேவை வழங்கவதாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே, தங்கும் விடுதிகள் தாங்கள் வழங்கும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவது அவசியம்', எனக் குறிப்பிட்டிருக்கிறது. 2022, ஜூலை-17 வரை மட்டும், நாளுக்கு ரூ.1000 வரையிலான விலையில் தங்குமிட சேவை வழங்கி வந்த உணவகங்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு பொருந்தும் எனவும் குறிப்பிட்டிருக்கிறது.

ஜிஎஸ்டி

தங்கும் விடுதிகளின் சேவைக்கு ஜிஎஸ்டி வரி கட்டாயம்: 

இதேபோல, நொய்டாவில் VS இன்ஸ்டிட்யூட் மற்றும் ஹோட்டல்ஸ் மேற்கொண்ட வழக்கிலும், கிட்டதட்ட ஒரே மாதிரியான தீர்ப்பையே வழங்கியிருக்கிறது லக்னோ AAR. தங்கும் விடுதிகள் மற்றும் தங்குமிட சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்கள் கண்டிப்பாக 12% ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறது லக்னோ AAR. அந்நிறுவனங்கள் வழங்கும் சேவையானது ஒரு நாளுக்கு ரூ.1000-த்துக்கும் கீழ் இருந்தாலும், அது ஜிஎஸ்டி வரிக்கு உட்பட்டதே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 2022, ஜூலை 18-க்குப் பின்பு தங்கும் விடுதிகள் வழங்கி வந்த சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரியைச் செலுத்த வேண்டும் எனத் தீர்ப்பளித்திருக்கிறது லக்னோ AAR.