அதிமுக இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும் - எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வுசெய்யப்பட்டது செல்லும் என்று அண்மையில் நீதிமன்றங்களில் உத்தரவிடப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் அவரை பொதுச்செயலாளராக அங்கீகரிக்காமல் ஒருங்கிணைப்பாளர், இணை-ஒருங்கிணைப்பாளர் என்றே குறிப்பிட்டது. இதனால் தம்மை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிச்சாமி டெல்லிஉயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம், கர்நாடகா மாநில தலைமைத்தேர்தல் ஆணையருக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளது. அதில், கர்நாடகா சட்டமன்றத்தேர்தலில் எடப்பாடி தரப்பு வேட்பாளருக்கு இரட்டைஇலை சின்னத்தை ஒதுக்கவேண்டும். அதிமுக'வின் திருத்தப்பட்டவிதிகள், நிர்வாகிகள் மாற்றம் ஏற்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமி, தேர்தல்ஆணையத்தின் அங்கீகாரத்தால் அதிமுக இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும் என்று தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து தனது கட்சி தொண்டர்கள், தனக்கு உறுதுணையாகயிருந்த அனைவருக்கும் நன்றி என்றும் கூறியுள்ளார்.