சொந்த ஊருக்கு கிளம்பிய பொதுமக்கள்; சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்
விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாள், வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் வெளியூர்களுக்கு படையெடுத்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) இரவு சொந்த ஊர்களுக்கு மக்கள் செல்ல ஆயத்தமானதால் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் கடும் கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்னையிலிருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. குறிப்பாக, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.