
இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
தென்மேற்கு வங்கக்கடல்-இலங்கை கடற்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று(நவ.,17)கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து நாளை(நவ.,18)மற்றும் நாளை மறுநாள்(நவ.,19)தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,
19ம்.,தேதியன்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் 20ம்.,தேதி கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், மயிலாடுதுறை, தேனி, தென்காசி,நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
வானிலை அறிக்கை
5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு #WeatherUpdate | #Rain | #VelichamTV pic.twitter.com/eItruQCZaO — Velicham TV (@velichamtvtamil) November 17, 2023