LOADING...
2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பதிவாகி இருக்கிறது

2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை 

எழுதியவர் Sindhuja SM
Sep 09, 2023
03:53 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, செப்டம்பர் 9 மற்றும் செப்டம்பர் 10 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- கோவை, நீலகிரி செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 15 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அடுத்த 7 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கான எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

ட்ஜ்கவ்க்கில்

சென்னையின் ஒருசில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு 

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யலாம். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.