Page Loader
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

எழுதியவர் Nivetha P
Apr 01, 2023
03:46 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகம் முழுவதும் இன்று(ஏப்ரல்.,1) தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தில் உள்ள கீழடுக்கு கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதாக சென்னை வானிலை அறிக்கை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள நீலகிரி, திருப்பூர், தேனி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு