
கனமழையால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு: எந்தெந்த ஊர் தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழையால் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (அக். 22) மாநிலத்தின் பல மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இன்று ஓரிரு மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. அதனால் அம்மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சிரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தனர். மாவட்டங்களின் விவரங்கள் பின்வருமாறு:
முழு விடுமுறை
முழு விடுமுறை (பள்ளி மற்றும் கல்லூரிகள்):
கனமழை மற்றும் அதற்கான எச்சரிக்கையை தொடர்ந்து, கீழ்க்கண்ட மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் (பள்ளி, கல்லூரிகள்) இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது: மயிலாடுதுறை செங்கல்பட்டு கடலூர் திருவாரூர் திருவள்ளூர் காஞ்சிபுரம் ராணிப்பேட்டை தஞ்சாவூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி சிவகங்கை புதுச்சேரி காரைக்கால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவை: சென்னை புதுக்கோட்டை பெரம்பலூர் நாமக்கல் சேலம் இந்த நிலையில் வானிலை மையம், தமிழகத்தில் வரும் அக்டோபர் 26-ம் தேதி வரை கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.