ஹிமாச்சல பிரதேசத்தில் தொடர் கனமழையால் கடும் நிலச்சரிவு - ரெட் அலெர்ட் எச்சரிக்கை
ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் திடீர் வெள்ளம், நிலச்சரிவுகள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில். நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்ற அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், அம்மாநிலத்தின் குல்லு மாவட்டத்திலுள்ள அன்னி நகர் பகுதியில் இன்று(ஆகஸ்ட்.,24)மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் சரிந்துள்ளது. இந்த இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே, இம்மாநிலத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என ரெட் அலெர்ட் எச்சரிக்கையினை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.