இணையத்தில் வைரலாகும் ஹரியானாவின் 1500 கிலோ எடையுள்ள கோடீஸ்வர எருமை
ஹரியானாவின் மீரட் நகரில் நடந்த சர்வதேச கால்நடை கண்காட்சியில், ஒரு எருமை அதன் அதிசயமான உணவு பட்டியலினால் எல்லா பார்வையாளர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த எருமையை 23 கோடி ரூபாய்க்கும் ஏலம் கேட்டும், அதன் உரிமையாளர் அதனை தர மறுத்தது மட்டுமில்லாமல், எருமையின் டயட்-ஐ வெளிப்படுத்தியது பலரையும் வாயடைக்க வைத்துள்ளது. இந்த எருமை, ஹரியானாவின் சிர்ஸா பகுதியைச் சேர்ந்த கில் என்ற விவசாயியிடம் உள்ளது. இதன் பெயர் "அன்மோல்". அது முரா ஜாதி எருமை. மீரட் நகரில் நடந்த கால்நடை கண்காட்சியில், அன்மோலின் ஏலம் 23 கோடி ரூபாயை எட்டியது. ஆனால், அதன் உரிமையாளர் கில். "எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருக்கின்றது" என்று கூறி, ஏலத்திற்கு உடன்படவில்லை கில்.
பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வாய்த்த எருமையின் தினசரி டயட்
அன்மோல் தினசரி உணவுக்கு 1,500 ரூபாய் செலவகிறது. அதன் உணவில் 250 கிராம் பாதாம், 30 வாழைப்பழங்கள், 4 கிலோ மாதுளை, 5 கிலோ பால், 20 முட்டைகள், கேக், பசுந்தீவனம், நெய், சோயாபீன்ஸ், மக்காச்சோளம் ஆகியவை அடங்கும். இதோடு, அன்மோல் தினமும் இரு முறை எண்ணெய் குளியல் (கடுகு மற்றும் பாதாம் கலந்த எண்ணெய்), மசாஜ் ஆகியவை செயப்படுகிறதாம். அதிகாரப்பூர்வமாக, இந்த அன்மோல் எருமை 13 அடி நீளமும், 6 அடி அகலமும், 1500 கிலோ எடையும் கொண்டுள்ளது.