Page Loader
ஹரியானா இனக்கலவரம்: தப்பிப்பிழைத்த நீதிபதியும், அவரது 3 வயது மகளும்
ஹரியானா கலவரத்தில் இதுவரை 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

ஹரியானா இனக்கலவரம்: தப்பிப்பிழைத்த நீதிபதியும், அவரது 3 வயது மகளும்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 03, 2023
01:48 pm

செய்தி முன்னோட்டம்

ஹரியானா மாநிலத்தில் சிலநாட்களுக்கு முன்னர் நடைபெற்ற மத ஊர்வலத்தின் மீதான தாக்குதல் தற்போது கலவரமாக மாறியுள்ளது. குறிப்பாக குருகிராம் அருகே உள்ள நூஹ் மாவட்டத்தில், பல கடைகள் எரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நூஹ் மாவட்டத்தின், கூடுதல் தலைமை குற்றவியல் நீதிபதி(ACGM) மற்றும் அவரின் 3-வயது மகள் சென்ற காருக்கு கலவரக்காரர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில், மயிரிழையில் நீதிபதியும், அவரது மகளும் தப்பியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. தொடர்ந்து, கலவக்காரர்களிடம் இருந்து தப்பிக்க நீதிபதியும், அவரது மகள் மற்றும் உடன் சென்ற பாதுகாப்பு அதிகாரி, மூவரும் நூஹில் உள்ள பழைய பேருந்து நிலையத்தின் பணிமனையில் தஞ்சம் புகுந்தனர். அதன்பின்னர், அவர்களை சில வக்கீல்கள் மீட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் அடிப்படையில் காவல்துறையினர் FIR பதிவு செய்துள்ளனர்.

card 2

5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு

FIR-இன் படி, "திங்கள்கிழமை மதியம் 1 மணியளவில், ACJM, அவரது 3-வயது மகள் மற்றும் அதிகாரி சியாராம் ஆகியோர் நல்ஹரில் உள்ள SKM மருத்துவக் கல்லூரிக்கு, ஃபோக்ஸ்வேகன் காரில், மருந்துகளை வாங்கச்சென்றனர். மதியம் 2 மணியளவில் அவர்கள் மருத்துவக் கல்லூரியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​டெல்லி-ஆல்வார் சாலையில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே சுமார் 100-150 கலவரக்காரர்கள் அவர்களைத் தாக்கினர். மறுநாள், காரைச் சோதனை செய்யச் சென்றபோது, ​​கலவரக்காரர்கள் அதை எரித்தது கண்டுபிடிக்கப்பட்டது" என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் நூ, பரிதாபாத் மற்றும் பல்வால் மாவட்டங்கள் மற்றும் குருகிராமின் துணைப் பிரிவுகளில் ஆகஸ்டு 5 வரை இணைய சேவைகள் தடை செய்யப்பட்டதுடன், 5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.