NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நூஹ் வன்முறை: காங்கிரஸ் எம்.எல்.ஏ-வை கைது செய்தது ஹரியானா போலீஸ்
    நூஹ் வன்முறை: காங்கிரஸ் எம்.எல்.ஏ-வை கைது செய்தது ஹரியானா போலீஸ்
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    நூஹ் வன்முறை: காங்கிரஸ் எம்.எல்.ஏ-வை கைது செய்தது ஹரியானா போலீஸ்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 15, 2023
    12:01 pm
    நூஹ் வன்முறை: காங்கிரஸ் எம்.எல்.ஏ-வை கைது செய்தது ஹரியானா போலீஸ்
    நூஹ் வன்முறை: காங்கிரஸ் எம்.எல்.ஏ-வை கைது செய்தது ஹரியானா போலீஸ்

    ஹரியானா மாநிலத்தின் ஃபெரோஸ்பூரைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரும், எம்எல்ஏவுமான, ஜிர்கா மம்மன் கான், ஜூலை 31 அன்று, நூஹ் மாவட்டத்தில் நடந்த வகுப்புவாத கலவரத்துடன் தொடர்புடையதாகக் கூறி கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட கான், கடந்த வாரம் நுஹ் காவல்துறையால் விசாரிக்கப்பட்டதாகவும், வெள்ளிக்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது. விஸ்வ ஹிந்து பரிஷத்(VHP) ஏற்பாடு செய்த மத அணிவகுப்பின் மீது ஒரு முஸ்லீம் கும்பல் கற்களை வீசியதாக துவங்கிய வகுப்புவாத வன்முறை, ஜூலை 31 அன்று நூஹ்வை உலுக்கிய பின்னர் அருகிலுள்ள பகுதிகளுக்கும் பரவியது. இந்த மோதலில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில், குருகிராம், பல்வால் மற்றும் ஃபரிதாபாத் போன்ற அண்டை பகுதிகளுக்கு வன்முறை பரவியதால் 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    2/2

    குற்றசாட்டை மறுத்த ஜிர்கா மம்மன் கான்

    கைதிற்கு முன்னதாக, காங்கிரஸ் தலைவர் கான், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தை அணுகினார். வன்முறை வெடித்தபோது அவர் நூஹ்வில் இல்லாததால், இந்த வழக்கில் தன்னை பொய்யாக சிக்க வைத்ததாகக் கூறினார். இருப்பினும், "ஆதாரங்களின் படி" கான் ஒரு குற்றவாளி என ஹரியானா காவல்துறை, நீதிமன்றத்தில் தெரிவித்தது. தங்கள் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில், தங்களிடம் தொலைபேசி பதிவுகள் மற்றும் பிற ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர்கள் கூறினர். விசாரணையை அக்டோபர் 19ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதற்கிடையில், இதே வழக்கில் பசு காவலர் மற்றும் பஜ்ரங் தள தலைவர் மோனு மானேசர் என்பவரும் கைது செய்யப்பட்டு, தற்போது 14 நாட்கள் நீதிமன்ற காவலில் உள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஹரியானா
    கைது
    காங்கிரஸ்

    ஹரியானா

    மதக் கலவரம் நடந்த ஹரியானா பகுதியில் இன்று மீண்டும் இந்து மத யாத்திரை கலவரம்
    ஹரியானா வன்முறைகளை அடுத்து 'முஸ்லீம்களைப் புறக்கணிக்க' 14 பஞ்சாயத்துகள் முடிவு  காவல்துறை
    ஹரியானா வன்முறை எதிரொலி: காவல்துறை கண்காணிப்பாளர் பணியிடமாற்றம் காவல்துறை
    ஹரியானா இனக்கலவரம்: தப்பிப்பிழைத்த நீதிபதியும், அவரது 3 வயது மகளும் கலவரம்

    கைது

    தமிழக மீனவர்கள் 17 பேர் கைது: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தர்ணா போராட்டம்  அண்ணாமலை
    ஆந்திர மாநிலம் நெல்லூரில் 144 தடை உத்தரவு ஆந்திரா
    தெலுங்கு தேசக்கட்சியினர் போராட்டம் - ஆந்திராவில் நிலவும் பதற்றம் சிஐடி

    காங்கிரஸ்

    கர்நாடகா மாநிலத்தில் பாஜக'வினர் போராட்டத்தினை கலைத்த தேனீக்கள் பாஜக
    குடியரசு தலைவரின் ஜி20 விருந்திற்கு மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்படவில்லை - பா.சிதம்பரம் கண்டனம்  இந்தியா
    'சனாதன தர்ம' கருத்து: உதயநிதி ஸ்டாலின், பிரியங்க் கார்கேவிற்கு எதிராக FIR பதிவு  திமுக
    நாடாளுமன்ற சிறப்பு அமர்வு: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளார் சோனியா காந்தி  சோனியா காந்தி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023