மிக தீவிர புயலாக வலுவடைந்தது 'ஹமூன்': 6 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழக வானிலை: வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று வலுப்பெற்று மிக தீவிர ஹமூன் புயலாக மாறியது. மேலும், அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய அதிதீவிர புயலான 'தேஜ்' புயல் இன்று தெற்கு அல்-கைதா அருகே ஏமன் கடற்கரையை கடந்தது. இதன் காரணமாக, தமிழகத்தின் எந்த பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என்பதை இப்போது பார்க்கலாம். அக்டோபர் 24 தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- நெல்லை, கன்னியாகுமாரி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர்
அக்டோபர் 25
தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அக்டோபர் 26 முதல் அக்டோபர் 28 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அக்டோபர் 29 மற்றும் அக்டோபர் 30 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.