குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு: EPS, OPSஸிற்கு அழைப்பா?
குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நடந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 182 இடங்களில் 156 இடங்களைக் கைப்பற்றி பாஜக வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. இதற்கானப் பதவியேற்பு விழா இன்று நடைபெறும் நிலையில் பிரதமர் மோடி நேற்றிரவு அகமதாபாத்துக்கு சென்றடைந்தார். பதவியேற்பு விழாவில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பூபேந்திர படேலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
குஜராத் நிலவரம் ஒரு அப்டேட் !
பூபேந்திர படேலுடன் சுமார் 25 அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர். காந்திநகரில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் பிற மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். மேலும், இதில் பாஜக மாநில முதல்வர்களும் கூட்டணி கட்சிகளும் கலந்து கொள்கின்றனர். இவர்களுடன் 200 பண்டித முனிவர்களும் இந்த விழாவில் கலந்து கொள்வதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கிடையில் குஜராத்தில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 5 எம்.எல்.ஏக்களும் பாஜகவில் சேரப்போவதாக வேறு ஒரு செய்தி பேசப்பட்டு வருகிறது.