கடந்த ஜூன் மாதத்தில் ரூ.1.61 லட்சம் கோடியாக அதிகரித்த GST வரி வசூல்
ஒவ்வொரு மாதமும் அதற்கு முந்தைய மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் குறித்த விபரங்களை மத்திய அரசு வெளியிடுவது வழக்கம். ஜூன் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி, ஜூன் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூலானது ரூ.1.61 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. இது கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் வசூலான தொகையை விட 12% அதிமாகும். இந்த ரூ.1.61 லட்சம் கோடியில், ரூ.31,013 லட்சம் கோடி CGST-யாகவும், ரூ.38,292 லட்சம் கோடி SGST-யாகவும், ரூ.80,292 லட்சம் கோடிய IGST-யாகவும், ரூ.11,900 லட்சம் கோடி செஸ் வரியாகவும் வசூலாகியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அதிகரித்து வரும் சராசரி வரி வசூல்:
ஜூன் மாதத்திற்கான வரிப் பகிர்வுக்குப் பிறகு, மத்திய அரசின் வரி வருவாய் ரூ.67,237 லட்சம் கோடியாகவும், மாநில அரசின் வரி வருவாய் ரூ.68,561 லட்சம் கோடியாகவும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூலானது ரூ.1.60 லட்சம் கோடி என்ற இலக்கைக் கடப்படி இது நான்காவது முறையாகும். ஒரு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஒவ்வொரு மாதமும் வசூலாகும் சராசரி வரி வசூலானது, 2021-22 நிதியாண்டில் ரூ.1.10 லட்சம் கோடியாகவும், 2022-23 நிதியாண்டில் ரூ.1.51 லட்சம் கோடியாகவும், 2023-24 நிதியாண்டில் ரூ.1.69 லட்சம் கோடியாகவும் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.