கூடங்குளம் அருகே தரைத்தட்டிய இழுவை கப்பல்
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அமைந்துள்ளது அணுமின் நிலையம். இங்கு ரஷ்யா நாட்டின் நிதியுதவியில் ஆயிரம் மெகா வாட் உற்பத்திக்கான திறன் கொண்ட 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டு மின்சார உற்பத்தி நடக்கிறது. இதனைத்தொடர்ந்து மேலும் அப்பகுதியில் 2 அணுஉலைகள் அமைக்கும் பணி நடப்பதால் 2 ஜெனரேட்டர்கள் ரஷ்யாவிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிகிறது. அங்கிருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வந்த இந்த இழுவை கப்பல் கூடங்குளம் அருகே பாறையில் மோதி தரை தட்டியது. மிதவை கப்பலுக்கும், இழுவை கப்பலுக்கும் இடையிலிருந்த தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் இந்த கப்பல் தரைதட்டியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதனையடுத்து, தற்போது இக்கப்பலினை மீட்கும் பணியில் கடலோரப்பாதுகாப்பு படையினர் குழுமத்தினர் மற்றும் அணுமின்நிலைய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.