'ஓட்டுக்கு லஞ்சம் வாங்கும் எம்.பி.க்களுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பாராட்டத்தக்கது': பிரதமர் மோடி
செய்தி முன்னோட்டம்
சபையில் ஓட்டளிக்க லஞ்சம் வாங்குவது , சட்டமன்றத்தில் பேசுவதற்கு பணம் வாங்குவது போன்ற வழக்குகளில் இருந்து எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் விடுபட முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
அவையில் பேசுவதற்கு அல்லது வாக்களிப்பதற்கு லஞ்சம் வாங்கும் எம்பி/எம்எல்ஏக்களுக்கு 1998 ஆம் ஆண்டில் விலக்கு அளிக்கப்பட்டது.
அந்த விதியை மாற்றி தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பை வெளியிட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், லஞ்சம் என்பது நாடாளுமன்ற சிறப்புரிமைகளால் பாதுகாக்கப்படவில்லை என்றார்.
இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் பிரதமர் மோடி, "இந்த சிறந்த தீர்ப்பு, தூய்மையான அரசியலை உறுதி செய்து, அரசாங்க அமைப்பின் மீது மக்களின் நம்பிக்கையை ஆழப்படுத்தும்" என்று கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவு
SWAGATAM!
— Narendra Modi (@narendramodi) March 4, 2024
A great judgment by the Hon’ble Supreme Court which will ensure clean politics and deepen people’s faith in the system.https://t.co/GqfP3PMxqz