பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்ய ஆளுநர் ரவி மறுப்பா?
செய்தி முன்னோட்டம்
பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிராமணம் செய்ய வேண்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்த நிலையில், அதனை ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, கடந்த ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி அமைச்சராக இருந்த பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது சென்னை உயர் நீதிமன்றம்.
அதனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவருடைய சட்டமன்ற பதவி பறிபோனது.
இருப்பினும், அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனையடுத்து அவர் மீண்டும் திருக்கோவிலூர் எம்எல்ஏவாக தொடர்வதாக அறிவிக்கப்பட்டது.
அதோடு, அவருக்கு அமைச்சராக பதவியேற்பு செய்ய வேண்டும் என ஆளுநருக்கு, முதல்வர் பரிந்துரைத்தார்.
ஆனால், முதல்வர் கடிதம் எழுதிய அடுத்த நாளே ஆளுநர் டெல்லி புறப்பட்டுச்சென்றார்.
ட்விட்டர் அஞ்சல்
பொன்முடி விவகாரம்
#BREAKING || பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் - ஆளுநர் மறுப்பு
— Thanthi TV (@ThanthiTV) March 17, 2024
திமுக எம்எல்ஏ பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க
ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநருக்கு கடிதம் எழுதி உள்ளார்#ThanthiTV #PONMUDI #CMSTALIN #rnravi pic.twitter.com/0fTggljoi7