Page Loader
"அரசாங்கத்தின் கண்கள் மூடப்பட்டுள்ளன": பொய்யாக விளம்பரம் செய்த பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் 

"அரசாங்கத்தின் கண்கள் மூடப்பட்டுள்ளன": பொய்யாக விளம்பரம் செய்த பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் 

எழுதியவர் Sindhuja SM
Feb 27, 2024
07:25 pm

செய்தி முன்னோட்டம்

நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகள் என்று கூறி "தவறான" விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததோடு, இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசை உச்ச நீதிமன்றம் இன்று கடுமையாக சாடியுள்ளது. "அரசு கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கிறது" என்று உச்ச நீதிமன்றம் இன்று கூறியது. பதஞ்சலி ஆயுர்வேத் என்பது யோகா குரு ராம்தேவால் இணைந்து நிறுவப்பட்ட நிறுவனமாகும். தடுப்பூசி மற்றும் நவீன மருந்துகளுக்கு எதிராக ராம்தேவ் அவதூறு பிரச்சாரம் செய்ததாக கடந்த வருடம் இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனையடுத்து, ஆகஸ்ட்-23, 2022 அன்று, மத்திய சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் ஆகியவற்றிற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்தியா 

ஒவ்வொரு விளம்பரத்திற்கும் ரூ. 1 கோடி அபராதம்

இந்நிலையில், இன்று இது குறித்து விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுபோன்ற விளம்பரங்களால் நாடு தவறாக வழிநடத்தப்படுகிறது என்று கூறியுள்ளது. மேலும், தவறான தகவல்களைக் பரப்பும் அனைத்து மருந்துவ விளம்பரங்களையும் உடனடியாக நிறுத்துமாறு பெஞ்ச் அந்த நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் உச்சநீதிமன்றம், நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகள் என்று கூறி "தவறான" விளம்பரங்களை வெளியிட்டதற்காக பதஞ்சலி நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. அந்த சுருக்கமான விசாரணையின் போது, ​​நவீன மருத்துவ முறைகளுக்கு எதிராக தவறான விளம்பரங்களை பரப்ப வேண்டாம் என்று பதஞ்சலியிடம் உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது. மேலும், அப்படிப்பட்ட பொய்யான மருத்துவ விளம்பரங்கள் வெளியானால், அப்படிப்பட்ட ஒவ்வொரு விளம்பரத்திற்கும் ரூ. 1 கோடி அபராதம் விதிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் முன்பு கூறியிருந்தது.