ஜார்க்கண்டில் சரக்கு ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்து
ஜார்க்கண்டின் பொகாரோவில் உள்ள துப்காடி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் இரண்டு வேகன்கள் தடம் புரண்டதால் ரயில் அங்கு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விபத்தையடுத்து, அந்த வழித்தடத்தில் செல்லும் பதினைந்து ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன என்று தென்கிழக்கு ரயில்வேயின் ஆத்ரா பிரிவு ரயில்வே மேலாளர் சுமித் நருலா பிடிஐயிடம் தெரிவித்தார். பொகாரோ ஸ்டீல் ஆலையில் இருந்து இரும்பு சரக்குகளை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில், துப்காடி மற்றும் பொகாரோ நிலையங்களுக்கு இடையே உள்ள பிரதான பாதையில் கவிழ்ந்தது. விபத்தால் பாதிக்கப்பட்ட பாதைகளில் ஒன்று சரி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக மற்ற பாதையை மீட்டெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என சுமித் நருலா மேலும் கூறினார்.