NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருவேடகத்தில், திருஞானசம்பந்தர் பாடல் எழுதப்பட்ட தங்க ஏடு கண்டுபிடிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருவேடகத்தில், திருஞானசம்பந்தர் பாடல் எழுதப்பட்ட தங்க ஏடு கண்டுபிடிப்பு
    திருஞான சம்பந்தர் பாடல் எழுதப்பட்ட தங்க ஏடு

    திருவேடகத்தில், திருஞானசம்பந்தர் பாடல் எழுதப்பட்ட தங்க ஏடு கண்டுபிடிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 24, 2023
    10:14 am

    செய்தி முன்னோட்டம்

    திருவேடகத்தில் பிரபலமான ஏடகநாதர் என்ற சிவன் கோவிலில், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட திருக்கோயில் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு, பராமரிப்பு நூலாக்கத் திட்டப் பணிக் குழுவினர், திருஞானசம்பந்தர் பாடல் எழுதப்பட்ட தங்க ஏடுகளை கண்டுபிடித்துள்ளனர்.

    அதோடு அந்த ஏட்டில், கோவிலின் வரவு செலவு கணக்கும் பதியப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

    இது போல, பண்டைய கோவிலில், தங்க ஏடுகள் கண்டுபிடிக்கப்படுவதும், அதில், சிவன் பாடலும், கோவிலின் கணக்குகளும் பதியப்பட்டிருப்பது, தமிழகத்தில் இதுவே முதல் முறை எனக்கூறுகிறார்கள்.

    தமிழகம் முழுவதும், இந்துசமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பண்டைய கோவில்களில், திருக்கோயில்கள், மடங்களின் ஓலைச் சுவடிகள் பாதுகாப்புபராமரிப்பு நூலாக்கத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    card2

    திருவேடக ஏடுகள் குறித்து ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் கூறியது:

    இந்த தங்க ஏடு கண்டுபிடிக்கப்பட்டது குறித்து நூலாக்கத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியருமான சு.தாமரைப்பாண்டியன், "45 ஆயிரத்துக்கும் மேலான கோயில்களில் ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயங்கள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறோம். இதுவரை 200-க்கும் அதிகமான கோயில்களில் கள ஆய்வு செய்துள்ளோம்" எனக்கூறினார்.

    மேலும், திருவேடத்தில் கிடைக்கப்பட்ட ஏடுகள் குறித்து பேசும்போது, "கோயில் தல புராணப்படி திருஞானசம்பந்தர் 'வாழ்க அந்தணர்' எனும் பதிகம் எழுதி, வைகை நதியிலிட்டதன் நினைவாக அப்பாடலைத் தங்க ஏட்டில் எழுதி பாதுகாத்து வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது. எழுதப்பட்ட காலம் பற்றிய குறிப்பு இல்லை. எழுத்தமைதி மூலம் 100 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதாக இருக்கலாம்" என்றார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழக அரசு
    அறநிலையத்துறை

    சமீபத்திய

    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்
    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்

    தமிழ்நாடு

    தமிழக வானிலை: அடுத்த 5 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு வானிலை அறிக்கை
    தமிழகத்தில் முத்திரைத்தாள் கட்டணம் உயர்கிறது - சட்டசபையில் நிறைவேற்றம்  தமிழக அரசு
    கும்பகோணம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டால் உண்டாகும் மாற்றங்கள் - ஓர் பார்வை  தமிழக அரசு
    காஞ்சிபுரத்தின் பாரம்பரிய பெருமைகளை எடுத்துரைக்கும் அஞ்சல் அட்டைகள் வெளியீடு  இந்தியா

    தமிழக அரசு

    தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணை வெளியீடு தமிழ்நாடு
    தமிழக அரசு - அனைத்து ஒப்புதல்கள் பெற்ற பிறகே பேனா சின்னம் அமைக்கப்படும் என பதில் மனுத்தாக்கல் கருணாநிதி
    ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூன்று பேர் பணியிடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு இந்தியா
    தமிழகத்தில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவு தமிழ்நாடு

    அறநிலையத்துறை

    தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு தமிழக அரசு
    சமயபுர மாரியம்மன் கோயில் வைப்பு நிதி 20 மாதங்களில் ரூ.556.39 கோடியாக உயர்வு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025