உயர்ந்த தங்கம் விலை.. இன்று எவ்வளவுக்கு விற்பனை செய்யப்படுகிறது?
கடந்த சில நாட்களாகவே தங்கம் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மத்திய அரசின் ரூ.2,000 திரும்பப் பெறும் அறிப்பைத் தொடர்ந்து, தங்கம் விலை அதிகமாக உயர்ந்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர். சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.55 உயர்ந்து ரூ.5,680-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவே, ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.440 உயர்ந்து ரூ.45,440-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.6,196-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவே சுத்த தங்களம் ஒரு பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.49,568-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ.1 உயர்ந்து 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.