LOADING...
சென்னையில் தனியார் பள்ளியில் வாயுக்கசிவு; 35 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
மாதிரி புகைப்படம்

சென்னையில் தனியார் பள்ளியில் வாயுக்கசிவு; 35 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

எழுதியவர் Venkatalakshmi V
Oct 25, 2024
04:35 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டதாக தகவல் வந்துள்ளது. இதில் ஒரு சில மாணவர்கள் மயக்கமடைந்ததில் நிலைமை விபரீதம் அடைந்தது. இதுவரை 35 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தகவல் வெளியானதும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட, அங்கே பதற்றம் நிலவி வருகிறது. காலை 10.30 மணி முதலே கெமிக்கல் வெளியேறியுள்ள நிலையில், அப்போதே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தினரிடம் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

விவரங்கள்

விஷவாயு எங்கிருந்து வந்தது என விசாரணை

கிராம தெரு பகுதியில் செயல்பட்டு வரும் இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மாலை நேரத்தில், திடீரென வாயுநெடி அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்கள் அவசரமாக வெளியேறினர். ஆனால், 3 மாணவர்கள் மயக்கமடைந்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாயு கசிவின் காரணம் தொழிற்சாலையிலிருந்து வந்ததா அல்லது பள்ளியின் ஆய்வகத்தில் இருந்து வெளியேறியதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் தீயணைப்பு துறையினர் பள்ளிவளாகத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post