சுகா துனேகே கொலை: கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் பொறுப்பேற்பு
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் என்ற ரவுடி, கனடாவின் வின்னிபெக்கில், சுக்தூல் சிங் கில் என்ற சுகா துனேகே கொல்லப்பட்டதற்கு பொறுப்பேற்றுக்கொண்டார். துனேகே, புதன்கிழமை அடையாளம் தெரியாத ஆசாமிகளால், சுட்டுக்கொல்லப்பட்டார். பிஷ்னோய் கும்பலின் கூட்டாளிகள், குர்லால் ப்ரார் மற்றும் விக்கி மிட்கேரா ஆகியோரின் கொலை விவகாரத்தின் பின்னணியில், துனேகே இருந்ததாகவும், அதற்கு பழிவாங்கும் நோக்கில்தான் அவனை கொலை செய்ததாகவும் ஒரு ஃபேஸ் புக் பதிவு கூறுகிறது. பிஷ்னோயின் கும்பல் என கூறிக்கொள்ளும் அந்த ஃபேஸ்புக் பக்கம், சுக்தூல் சிங்கை ஒரு "போதை அடிமை" என்று அழைத்த பிஷ்னோயின் கும்பல் அவர் பலரின் வாழ்க்கையை அழித்ததாகவும், இறுதியில் அவர் "அவரது பாவங்களுக்காக" தண்டிக்கப்பட்டார் என்றும் குற்றம் சாட்டியது.
சுகா துனேகே என்ற கேங்க்ஸ்டர் சுக்தூல் சிங் யார்?
பஞ்சாபின் மோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் துனேகே. பஞ்சாப் காவல்துறையின் கூற்றுப்படி, அவர் காலிஸ்தான் ஆதரவாளர்களுடன் தொடர்புடையவர். கொலை, கொள்ளை உட்பட குறைந்தது 20 வழக்குகளில் தேடப்பட்ட துனேகே, கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கனடாவுக்கு தப்பிச் சென்றான். எனினும் அங்கிருந்தபடியே, தனது உதவியாளர்கள் மூலம் பஞ்சாப் மற்றும் அருகிலுள்ள மாநிலங்களில் குற்றங்களை நடத்திவந்தான் துனேகே. காலிஸ்தான் புலிப்படையின் பயங்கரவாதியாக நியமிக்கப்பட்ட அர்ஷ் டல்லாவின் நெருங்கிய கூட்டாளி, துனேகே . நிஜ்ஜாரின் கொலைக்குப் பிறகு, அவர்கள் இருவரும் காலிஸ்தான் படையை புதுப்பிக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.