ஜி20 உச்சிமாநாட்டிற்காக ஏஐ கேமராக்கள், ட்ரோன்கள் மூலம் உச்சகட்ட பாதுகாப்பு வழங்கும் இந்தியா
செய்தி முன்னோட்டம்
உலகின் டாப் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் தலைவர்கள் ஜி20 உச்சிமாநாட்டிற்காக டெல்லிக்கு வர உள்ளதால், இந்திய பாதுகாப்பு அமைப்புகள் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
குறிப்பாக ஜி20 உச்சிமாநாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக டெல்லி காவல்துறை மற்றும் பிற துணை ராணுவப் பிரிவுகள் தொழில்நுட்பத்தைக் கையில் எடுத்துள்ளன.
இதன்படி, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கேமராக்கள், சாப்ட்வேர் அடிப்படையிலான அலாரங்கள் மற்றும் ட்ரோன்கள் கண்காணிக்கவும், உச்சிமாநாட்டின் இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்யவும் பயன்படுத்தப்படும்.
சந்தேகத்திற்கு இடமில்லாத நடமாட்டத்தைக் கண்காணிக்க இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும் யாராவது சுவர்களில் ஏறுவது அல்லது ஓடுவது அல்லது கீழே குனிவது போன்ற அசாதாரண அசைவுகளைச் செய்தால், ஏஐ கேமராக்கள் பாதுகாப்புப் பணியாளர்களை எச்சரிக்கும்.
India tightens security for G20 Summit
டெல்லி வந்துள்ள வெளிநாட்டு உளவு அமைப்புகள்
கூடுதல் பாதுகாப்பிற்காக, ஜி20 உச்சிமாநாட்டின் போது உயரமான கட்டிடங்களில் தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) கமாண்டோக்கள் மற்றும் ராணுவ துப்பாக்கி சுடும் வீரர்கள் நிறுத்தப்படுவார்கள்.
அதுமட்டுமின்றி, அமெரிக்காவிலிருந்து சிஐஏ, பிரிட்டனில் இருந்து எம்ஐ 6 மற்றும் சீனாவில் இருந்து எம்எஸ்எஸ் உள்ளிட்ட சர்வதேச பாதுகாப்பு உளவு அமைப்புகளின் குழுக்கள் ஏற்கனவே அந்தந்த பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய டெல்லி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், விஐபி பாதுகாப்பில் அனுபவம் பெற்ற சுமார் 1,000 பாதுகாப்புப் பணியாளர்களைக் கொண்ட "சிறப்பு 50" குழுவை மத்திய ரிசர்வ் போலீஸ் படை தயார் செய்துள்ளது.
ஜி20 உலகத் தலைவர்களின் உச்சிமாநாடு டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.