Page Loader
ஜி20 உச்சிமாநாட்டின் 2வது நாளான இன்று என்ன நடக்கும்?
G20 உச்சிமாநாட்டின் இரண்டாவது நாள் சந்திப்பு இன்று காலை 8:15 மணிக்கு தொடங்கியது.

ஜி20 உச்சிமாநாட்டின் 2வது நாளான இன்று என்ன நடக்கும்?

எழுதியவர் Sindhuja SM
Sep 10, 2023
09:20 am

செய்தி முன்னோட்டம்

ஜி20 உச்சிமாநாட்டிற்காக புது டெல்லியில் கூடியிருக்கும் உலகத் தலைவர்கள், மாநாட்டின் முதல் நாளான நேற்று "உலகளாவிய நம்பிக்கை பற்றாக்குறை", காலநிலை மாற்றம் மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளை சரிசெய்வதற்கான பல பெரிய அறிவிப்புகளை வெளியிட்டனர். இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக விவாதங்கள் தொடர இருக்கிறது. ஜி20 உச்சிமாநாட்டின் இரண்டாவது நாள் சந்திப்பு இன்று காலை 8:15 மணிக்கு தொடங்கியது. 8:15 AM-9:00 AM: அனைத்து உலகத் தலைவர்களும் தூதுக்குழுத் தலைவர்களும் தனித்தனி வாகன அணிவகுப்புகளில் ராஜ்காட் வந்து, அங்குள்ள தலைவர்கள் ஓய்வறைக்குள் இருக்கும் அமைதிச் சுவரில் கையெழுத்திட்டனர். 9:00 AM-9:40 AM: உலக தலைவர்கள் மகாத்மா காந்தியின் சமாதியில் மலர்மாலைகளை வைத்து வணங்கிய பிறகு, காந்தியின் விருப்பமான பக்திப் பாடல்களை கேட்டு ரசித்தனர்.

டகன்வ்

இன்றோடு முடிவடைகிறது  ஜி20 உச்சி மாநாடு-2023

9:40 AM - 10:15 AM: ஜி20 மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்திற்கு உலக தலைவர்கள் வரத் தொடங்குவார்கள். 10:15 AM - 10:28 PM: பிரகதி மைதானத்தில் உள்ள சவுத் பிளாசா, லெவல் 2, பாரத் மண்டபம் ஆகிய இடங்களில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெறும். அதில் அனைத்து உலகத் தலைவர்களும் பங்கேற்பார்கள்.10:30 AM - 12:30 PM: 'ஒரு எதிர்காலம்' என்ற தலைப்பிலான மூன்றாவது அமர்வு பாரத் மண்டபத்தில் நடைபெறும். இதைத் தொடர்ந்து, புது டெல்லி பிரகடனம் இறுதியில் ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பிறகு, ஜி20 உச்சி மாநாடு-2023 இதோடு முடிவடையும்.