ஜி20 வெளியுறவுத்துறை கூட்டத்தில் என்னென்ன விவாதிக்கப்பட்டது
ஜி20 வெளியுறவுதுறை அமைச்சர்கள் கூட்டம் இன்று(பிப் 2) இந்தியாவின் தலைமையின் கீழ் புது டெல்லியில் நடைபெற்றது. இந்தியாவால் அழைக்கப்பட்ட ஜி20 அல்லாத உறுப்பினர்கள் உட்பட 40 நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் பேசினார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: உலகளாவிய தெற்கத்திய நாடுகளுக்கு குரல் கொடுப்பது முக்கியம் என்று பிரதமர் மோடி கூறினார். ஏனெனில் இந்த நாடுகள் உண்மையில் தாங்க முடியாத கடன் மற்றும் புவி வெப்பமயமாதலினால் பின்னடைவை சந்தித்து கொண்டிருக்கின்றன. ஜி20 ப்ரெசிடெண்சி நடத்திய ஜி20 வெளியுறவுதுறை அமைச்சர்களின் மிகப்பெரிய கூட்டம் இதுவாகும். எதிர்கால போர்கள் மற்றும் பயங்கரவாதத்தை தடுக்கும் வகையில் பன்னாட்டு ஆளுமை இன்று நெருக்கடியில் உள்ளது.
போதைப்பொருளுக்கு எதிரான தலைப்பைப் பற்றி விவாதிக்கப்பட்டது
ஜி20 கூட்டத்தில் ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரச்சினைகளின் சவால்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. பிரதமர் மோடி "நம்மை ஒன்றுபடுத்துவது எது, நம்மை பிரிப்பது எது" என்பதை உணருமாறு அறிவுறுத்தினார். சீன வெளியுறவுதுறை அமைச்சரை சந்தித்தேன். இந்திய-சீன உறவில் உண்மையான பிரச்சனைகள் உள்ளன. அவை மிகவும் வெளிப்படையாக விவாதிக்கப்பட வேண்டும். சந்திப்பில் மிக முக்கியமாக நமது இருதரப்பு உறவு மற்றும் அதில் உள்ள சவால்கள், குறிப்பாக எல்லைப் பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. முதன்முறையாக ஜி20 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் போதைப்பொருளுக்கு எதிரான தலைப்பைப் பற்றி விவாதித்தனர். இந்த விஷயத்தில் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வலுவான சர்வதேச ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்தனர். மேலும், QUAD வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மார்ச்-3ஆம் தேதி டெல்லியில் சந்திக்க உள்ளனர் என்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.