NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் இன்று முதல் Formula 4 கார் பந்தயம் தொடக்கம்; போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் இன்று முதல் Formula 4 கார் பந்தயம் தொடக்கம்; போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு
    இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா - 4

    சென்னையில் இன்று முதல் Formula 4 கார் பந்தயம் தொடக்கம்; போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 30, 2024
    09:33 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு விளையாட்டுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா - 4 நடத்தவுள்ளது.

    இன்று சென்னை தீவுத்திடல் வரை மைதானத்தைச் சுற்றி இந்த போட்டி தொடங்கும்.

    இன்று, (30.08.2024) முதல் செப்டம்பர் 01 ஆம் தேதி(01.09.2024) வரை மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை போட்டி நடைபெறுவதை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சென்னை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி:

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Traffic Changes for Formula 4 Race #Formula4#Formula4CarRace #Chennai pic.twitter.com/phHWM9kZOe

    — கிருஷ்ணகுமார் @ Krishnakumar (@mkrishna143) August 30, 2024

    போக்குவரத்து மாற்றம்

    சென்னையில் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்

    இது தொடர்பாகச் போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "காமராஜர் சாலையில் தெற்கிலிருந்து வரும் வாகனங்கள், போர் நினைவிடம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் சிலை, சென்ட்ரல் லைட் பாயின்ட் (மத்திய ரயில் நிலையம்), ஈவிஆர் சாலை வழியாக சென்றடையலாம்".

    "மவுண்ட் ரோட்டில் தெற்கிலிருந்து வரும் வாகனங்கள் வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் லைட் பாயின்ட் நோக்கித் திருப்பி விடப்படும்".

    "சிவானந்த சாலை மற்றும் கொடி மரச் சாலை முற்றிலும் மூடப்படும்" எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பல்லவன் சாலை

    பல்லவன் சாலையில் வழக்கம் போல வாகனங்கள் இயங்கும்

    வடக்கு பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்தவித போக்குவரத்து மாற்றமும் இல்லை. சென்ட்ரல் லைட்டில் இருந்து அண்ணா சிலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் செல்லலாம்.

    பல்லவன் சாலை சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை ஒரு வழிப்பாதையானது தற்காலிக இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. முத்துசாமி சந்திப்பிலிருந்து அண்ணாசாலை மற்றும் கொடி மரச்சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.

    அதற்குப் பதிலாக, பல்லவன் சாலை, ஈவிஆர் சாலை, சென்ட்ரல் இரயில்வே நிலையம், பெரியமேடு காந்தி இர்வின் வழியாக சென்று தங்கள் சேர வேண்டிய இலக்கை அடையலாம்".

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    போக்குவரத்து
    போக்குவரத்து காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சென்னை

    ஆபரண தங்கத்தின் விலை ரூ.160 சரிந்தது  தங்கம் வெள்ளி விலை
    ஒரு வாரத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் சரிந்தது  தங்கம் வெள்ளி விலை
    ஆபரண தங்கத்தின் விலை ரூ.160 சரிந்தது  தங்கம் வெள்ளி விலை
    ஆபரண தங்கத்தின் விலை ரூ.360 உயர்ந்தது  தங்கம் வெள்ளி விலை

    போக்குவரத்து

    போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்: நாளை பேருந்துகள் இயங்கும் என அமைச்சர் உறுதி வேலைநிறுத்தம்
    பஸ் ஸ்ட்ரைக்: மதுரை தவிர மற்ற ஊர்களில் பேருந்துகள் வழக்கம்போல இயக்கம் வேலைநிறுத்தம்
    பஸ் ஸ்ட்ரைக்: பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்துள்ள ஊழியர்களுக்கு மெமோ வேலைநிறுத்தம்
    போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ் வேலைநிறுத்தம்

    போக்குவரத்து காவல்துறை

    புதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை புதுச்சேரி
    சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மீது இரும்பு கம்பியால் தாக்குதல் சென்னை
    சென்னையில் நம்பர் பிளேட் விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி துவக்கம் சென்னை
    சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025