
சென்னையில் நடக்கவிருந்த பார்முலா 4 கார் பந்தயம் காலவரையறையின்றி ஒத்திவைப்பு
செய்தி முன்னோட்டம்
சென்னை தீவுத்திடல் மைதானத்தினை சுற்றியுள்ள 3.5 கி.மீ., பகுதியில் கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அதன்படி தீவுத்திடல் பகுதியிலிருந்து அண்ணாசாலை, பிளாக் ஸ்டாப் ரோடு, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வரையில் சென்று மீண்டும் தீவுத்திடல் சென்றடையும் வகையில் பந்தையத்திற்கான சாலை அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த சாலையானது சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
தொடர்ந்து, புது முயற்சியாக இந்த கார் பந்தயம் நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்திருந்தது.
இதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில், இந்த கார் பந்தையமானது டிசம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிப்புகள் வெளியானது.
பந்தயம்
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால் கடும் சிரமத்திற்கு ஆளான மக்கள்
இந்நிலையில், சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்தது.
பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதனிடையே, புயல் மற்றும் வெள்ளம் பாதிப்பு காரணமாக கார் பந்தயம் நடத்துவதில் பெரும் சிரமம் இருப்பதால் பந்தயத்தை ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது.
அதன்படி இந்த பந்தயம் டிச.,15 மற்றும் 16ம் தேதிகளில் நடத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இதனிடையே மீண்டும், இந்த பந்தயம் நடக்கும் என்று வெளியான தேதியில் நடக்காது என்றும், காலவரையறையின்றி சென்னையில் நடக்கவிருந்த பார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைக்கப்படுவதாகவும் தமிழக அரசு அண்மையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.