NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளா பள்ளியில் முன்னாள் மாணவர் துப்பாக்கி சூடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரளா பள்ளியில் முன்னாள் மாணவர் துப்பாக்கி சூடு
    கேரளா பள்ளியில் முன்னாள் மாணவர் துப்பாக்கி சூடு

    கேரளா பள்ளியில் முன்னாள் மாணவர் துப்பாக்கி சூடு

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 22, 2023
    09:45 am

    செய்தி முன்னோட்டம்

    மாணவர்கள், ஆசிரியர்களைத் தாக்குவது முதல் மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்குவது என, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே வன்முறை நடவடிக்கைகள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

    இந்த நேரத்தில், கேரளாவின் திருச்சூர் மாவட்டத்திலுள்ள விவேகோதயம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று, (செவ்வாய்கிழமை) 18 வயது இளைஞன் ஒருவன், துப்பாக்கியால் சுட்டது, மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    முலாயம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் என அடையாளம் காணப்பட்ட அவர், அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர் என அவரை கைது செய்த காவல்துறையினர் தெரிவித்தனர்.

    முதலில், பள்ளியின் முதல்வர் அறைக்குள் நுழைந்த ஜெகன், பின்னர் வகுப்பறைக்குள் புகுந்து யாரையும் குறிவைக்காமல், வானத்தை நோக்கி பலமுறை சுட்டதாக கூறப்படுகிறது.

    மேலும், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    card 2

    கைது செய்யப்பட்ட மாணவர் மதுபோதையில் இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் 

    இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி ஊழியர் ஒருவர், "நாங்கள் எங்கள் அலுவலக வேலைகளை செய்து கொண்டிருந்த போது, வெளியில் இருந்து ஒருவர் உள்ளே நுழைவதை பார்த்தோம்".

    "அவர் சைக்கிள் நிறுத்துமிடத்திற்குச் சென்று சைக்கிள்களை எட்டி உதைத்தார். பின்னர் நேராக ப்ரின்சிபாலின் அறைக்குள் நுழைந்தார். அப்போதுதான் அவர் கையிலிருந்த துப்பாக்கியை கவனித்தோம். உடனே, காவல்துறையினருக்கு தெரிவித்தோம்" எனக்கூறினார்.

    தகவல் கிடைத்ததும், பள்ளிக்கு விரைந்த போலீசார், ஜெகனை கைது செய்தனர். தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, மேலும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நியூஸ் மினிட் செய்திகள்படி, அந்த வாலிபர் ஏற்கனவே தனது முந்தைய பள்ளியில் சிக்கலை ஏற்படுத்தியதால் தான், விவேகோதயம் பள்ளிக்கு மாற்றப்பட்டார். எனினும், பள்ளி இறுதித்தேர்வுக்கு அவர் வரவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பள்ளி மாணவர்கள்
    துப்பாக்கி சூடு
    கேரளா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பள்ளி மாணவர்கள்

    தமிழ்நாடு அரசு பள்ளிகளில் குவியும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்  தமிழ்நாடு
    மாணவர்களின் திறனை வளர்க்க புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தும் CBSE  இந்தியா
    திருச்சியில் மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியை போக்ஸோ வழக்கில் கைது  திருச்சி
    ப்ளஸ் 2 தேர்வில் அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் எடுத்த திண்டுக்கல் மாணவி  தமிழ்நாடு

    துப்பாக்கி சூடு

    பிபா மகளிர் உலகக்கோப்பை : கால்பந்து அணிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச் சூடு கால்பந்து
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் 4 பேர் சுட்டுக் கொலை ரயில்கள்
    சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள்  சென்னை
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் நடந்த துப்பாக்கி சூடு: உண்மையில் என்ன நடந்தது? மகாராஷ்டிரா

    கேரளா

    தமிழக எல்லையில் கொட்டப்படும் கேரள மருத்துவக்கழிவுகள் - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் தமிழக அரசு
    ராமேஸ்வரம் கடற்பகுதி - புதிய கடல் வாழ் நுண்ணுயிருக்கு அப்துல் கலாம் பெயர் அப்துல் கலாம்
    இணையத்தில் ட்ரெண்டாகும் 'KeralaBoycottLeo' ஹேஷ்டேக் - கேரளாவில் லியோ புறக்கணிப்பு? சினிமா
    நிபா வைரஸ் கட்டுக்குள் வந்ததால் கேரளா கோழிக்கோட்டில் நாளை பள்ளிகள் திறப்பு  நிபா வைரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025