
ஒரே மாவட்டத்தை சேர்ந்த ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி MLAகள், ஒரே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதி
செய்தி முன்னோட்டம்
திமுகவின் மூத்த நிர்வாகியும், தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி உடல்நலக்குறைவினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில், அவருடைய நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவின் MLA வும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதனும், நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவினால் சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒரே மாவட்டத்தை இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியசாமியை சோதித்த மருத்துவர்கள், அவருக்கு தொடர் காய்ச்சல் இருப்பதால் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவுறித்தியதாக கூறப்படுகிறது.
அதே போல, நத்தம் விஸ்வநாதனுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும், அவருக்கு நரம்பியல் பிரச்சினை தொடர்பான பரிசோதனைகள் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
அமைச்சர்கள் மருத்துவமனையில் அனுமதி
ஒரே மாவட்டத்தை சேர்ந்த இன்னாள், முன்னாள் அமைச்சர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சியில் தொண்டர்கள்!#AIADMK #NathamViswanathan #DMK #IPeriyasamy #ApolloHospitalhttps://t.co/YN0so5zlLe
— Asianetnews Tamil (@AsianetNewsTM) July 31, 2024