Page Loader
மத்திய அமைச்சர் HD குமாரசாமிக்கு மூக்கில் இருந்து வழிந்த ரத்தம், உஷ்ணம் காரணமாக இருக்கலாம் என மருத்துவமனை அறிக்கை
கர்நாடகா மாநில முன்னாள் முதல்வரும், மத்திய கனரக தொழில்துறை அமைச்சருமான HD குமாரசாமி

மத்திய அமைச்சர் HD குமாரசாமிக்கு மூக்கில் இருந்து வழிந்த ரத்தம், உஷ்ணம் காரணமாக இருக்கலாம் என மருத்துவமனை அறிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Jul 29, 2024
08:36 am

செய்தி முன்னோட்டம்

நேற்று மாலை கர்நாடகா மாநில முன்னாள் முதல்வரும், மத்திய கனரக தொழில்துறை அமைச்சருமான குமாரசாமி பெங்களூருவில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிக்கொண்டிருக்கும் போதே மூக்கில் ரத்தம் வழிந்துள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஒவ்வாமை அல்லது உடல் உஷ்ணம் காரணமாக அவரது மூக்கில் இருந்து ரத்தம் வழிந்திருக்கலாம் என தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் HD குமாரசாமி, பக்கவாதம் பிரச்சினைக்காக மருந்து சாப்பிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆரம்பகட்ட மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் முடிந்து தற்போது குமாரசாமி நலமுடன் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. அதோடு அவர் வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

HD குமாரசாமி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்