
நடிகர் ரஜினிகாந்த்தை திடீரென சந்தித்தார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்
செய்தி முன்னோட்டம்
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாகி தற்போது உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது 'ஜெயிலர்' திரைப்படம்.
இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி முதல் ஓடிடி'யில் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகவுள்ளது என்று அண்மையில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, இன்று(செப்.,2) சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜனியின் வீட்டிற்கு சென்று அவரை ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று ரஜினியை சந்தித்து பேசியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது சுற்றுப்பயணத்தினை நாளை(செப்.,3)துவங்கவுள்ள நிலையில், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறப்படுகிறது.
எனினும், ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த சந்திப்பில், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
திடீர் சந்திப்பு
நடிகர் ரஜினிகாந்துடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு!#Rajinikanth #Jailer #OPS #OPanneerselvam #OPSvsEPS #aiadmk #kamadenutamil
— Kamadenu (@KamadenuTamil) September 2, 2023
Click Here 👉https://t.co/NglF6ZzHIg pic.twitter.com/aiCmzhGySq