
முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
செய்தி முன்னோட்டம்
100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்த வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று கேரளாவில் கைது செய்யப்பட்டார்.
இன்று அதிகாலை நீதிமன்றம் முன்பு ஆஜர் செய்யப்பட்ட அவரை, ஜூலை 31ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான இடத்தை, விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள், போலி சான்றிதழ் கொடுத்து பத்திரப்பதிவு செய்ததாகவும், பதிவு செய்வதற்கு தன்னையும், தனது மனைவியையும் மிரட்டியதாகவும் அவர் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கினை CBCID விசாரித்து தற்போது விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக அவரின் முன்ஜாமீன் மனுக்களும் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நீதிமன்ற காவல்
#JUSTIN | நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
— Thanthi TV (@ThanthiTV) July 17, 2024
திருச்சி மத்திய சிறையில் வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவு
கரூரில் போலி சான்றிதழ் வழங்கி… pic.twitter.com/qMGa2cE12n