NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராகுல் காந்தியை புகழ்ந்து பதிவிட்டதை நீக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராகுல் காந்தியை புகழ்ந்து பதிவிட்டதை நீக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
    இந்த பதிவு, அதிமுக முகாமில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    ராகுல் காந்தியை புகழ்ந்து பதிவிட்டதை நீக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

    எழுதியவர் Venkatalakshmi V
    May 22, 2024
    02:05 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்து ஒரு பதிவை இட்டார்.

    'நான் பார்த்து நெகிழ்ந்து ரசிக்கும் இளம் தலைவர்' என்று ராகுல் காந்தியின் படத்துடன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

    செல்லூர் ராஜுவின் இந்த பதிவை, மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்றார்.

    எனினும், இந்த பதிவு, அதிமுக முகாமில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து செல்லூர் ராஜூ தரப்பில் விசாரித்தபோது, "ராகுலின் எளிமைக்காக சாதாரணமாக போட்ட பதிவுதான், வேறு ஒன்றுமில்லை'' என்று தெரிவிக்கிறார்கள்.

    கட்சியின் மூத்த தலைவர்கள் இது கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிரானது எனவும் அது அவரின் தனிப்பட்ட கருத்து என கூறிய நிலையில், தற்போது அந்த பதிவை நீக்கியுள்ளார் செல்லூர் ராஜு.

    செல்லூர் ராஜு 

    சர்ச்சைகளுக்கு பெயர் போன செல்லூர் ராஜு

    அமைச்சராக இருந்தபோதும் சரி, தற்போது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக இருக்கும்போதும் சரி கட்சி கூட்டத்திலும், செய்தியாளர் கூட்டத்திலும் அதிரடியாக எதையாவது பேசி மட்டுமல்ல, தெர்மாகோல் விடுவது போன்ற செயலாலும் பரபரப்பை உண்டு பண்ணியவர் செல்லூர் ராஜூ என்பது அனைவருக்கும் தெரியும்.

    இந்நிலையில் கட்சியின் நிலைபாட்டுக்கு எதிராக 'மத்தியில் மோடி வந்தாலும், ராகுல் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்' என்று ஏற்கெனவே இவர் பேசியதும் சர்ச்சையானது.

    அதேபோல, ' எம்.ஜி.ஆரைப் போல சம்பாதித்த பணத்தை மக்களுக்கு செலவு செய்ய நினைப்பவர் நடிகர் விஜய்' என பேசி கட்சினரையே அதிர வைத்தார்.

    இப்படி அடிக்கடி அதிரடியாகப் பேசி வந்த செல்லூர் ராஜூ தற்போது காங்கிரஸ் தலைவரை புகழ்ந்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அதிமுக
    ராகுல் காந்தி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அதிமுக

    டெட் பட்டதாரிகள் சங்கத்தினருடனான அன்பில் மகேஷின் பேச்சுவார்த்தை தோல்வி  பள்ளிக்கல்வித்துறை
    அதிமுக கொடி, சின்னம், பெயர் உள்ளிட்டவைகளை பயன்படுத்த ஓபிஎஸ்'க்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம்  சென்னை உயர் நீதிமன்றம்
    'அம்மா மினி கிளினிக் இனி கிடையாது' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்  தமிழ்நாடு
    துணை வேந்தருக்கான பணி நியமன கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்தார் தமிழக ஆளுநர்  ஆர்.என்.ரவி

    ராகுல் காந்தி

    ராகுலுக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை; பிரணாப் முகர்ஜியின் மகள் வெளியிட்டுள்ள புத்தகத்தில் பரபரப்பு காங்கிரஸ்
    தெலுங்கானாவின் முதலமைச்சராக பதவியேற்கிறார் ரேவந்த் ரெட்டி; விழாவில் சோனியா, ராகுல் பங்கேற்கின்றனர் தெலுங்கானா
    காந்தி குடும்ப வழிபாடு காங். வீழ்ச்சிக்கு வழிவகுத்ததாக பிரணாப் ஏன் நம்பினார்?  காங்கிரஸ்
    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து  காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025