Page Loader
விமானத்திற்குள் 'ஹைஜாக்' செய்வது பற்றி பேசிய பயணி கைது 
இதனால், அந்த விமானம் 4 மணி நேரம் தாமதமானது.

விமானத்திற்குள் 'ஹைஜாக்' செய்வது பற்றி பேசிய பயணி கைது 

எழுதியவர் Sindhuja SM
Jun 23, 2023
04:19 pm

செய்தி முன்னோட்டம்

விஸ்தாராவின் மும்பை-டெல்லி விமானத்தில் பயணித்த 27 வயது ஆண் பயணி ஒருவர், விமானம் கிளம்புவதற்கு முன் 'ஹைஜாக்' செய்வது பற்றி மொபைலில் சத்தமாக பேசி கொண்டிருந்தால், விமான விதிகளின் படி மொத்த விமானமும் சோதனையிடப்பட்டது. மேலும், அவர் அப்படி பேசியதற்காக கைது செய்யப்பட்டார். இதனால், அந்த விமானம் 4 மணி நேரம் தாமதமானது. 'ஹைஜாக்' என்றால் ஆங்கிலத்தில் 'கைப்பற்றுங்கள்' என்று பொருள்படும். இந்த வார்த்தை பொதுவாக தீவிரவாதம் மற்றும் கொள்ளை சம்பவங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக விமான நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சி சன்

இது குறித்து காவல்துறையினர் தெரிவித்திருப்பதாவது:

இரவு 7 மணியளவில் விமானம் டெல்லிக்கு புறப்படுவதற்கு முன்பு இந்த சம்பவம் நிகழ்ந்தது. பயணிகள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். விமான பணியாளர்கள் தங்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விமான பணியாளர்களும் சில பயணிகளும், ரித்தேஷ் சஞ்சய்குமார் ஜுனேஜா என்ற பயணி மொபைலில் பேசுவதை கேட்டிருக்கின்றனர். "அகமதாபாத் விமானத்தில் ஏறுவேன். உங்களுக்கு ஏதாவது சிரமம் ஏற்பட்டால் எனக்கு கால் பண்ணுங்க. ஹைஜாக் செய்றதுக்கு பிளான் போட்டாச்சு. அதுக்குள்ள நுழைய முடியும் அதனால் கவலை பட வேண்டாம்." என்று ரித்தேஷ் ஹிந்தியில் கூறியதை கேட்ட பயணிகள் பயத்தில் தங்கள் இடத்தில் இருந்து எழுந்துவிட்டனர். அதன்பிறகு, அவரை விமான பணியாளர்கள் பாதுகாப்பு ஊழியர்களிடம் ஒப்படைத்தனர். தற்போது, அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.