Page Loader
கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி! 
கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி

கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி! 

எழுதியவர் Arul Jothe
May 31, 2023
12:59 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் அமைந்துள்ள செம்மொழி பூங்காவில், இரண்டாவது ஆண்டாக மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. ஜூன் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை இந்த மலர் கண்காட்சி நடத்தப்படும் என தோட்டக் கலைத்துறை அறிவித்துள்ளது.. இதற்காக பெங்களூரு, உதகை, திண்டுக்கல் என பல பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மலர் வகைகள் காட்சிப்படுத்தபட உள்ளது. இந்தாண்டு முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா என்பதனால், தமிழக அரசு இந்த கண்காட்சியை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

 மலர் கண்காட்சி