
தீபாவளி பண்டிகை - சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை
செய்தி முன்னோட்டம்
இந்தாண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே நம் நினைவிற்கு வருவது பட்டாசுகள் தான்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அன்றைய தினம் விதவிதமான பட்டாசுகளை வெடித்து மிக கோலாகலமாக பண்டிகையினை கொண்டாடுவர்.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையினையொட்டி சென்னை தீவுத்திடல் பகுதியில் பட்டாசு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டும் அக்டோபர் மாதம் 29ம் தேதி முதல் நவம்பர் 12ம் தேதி வரை தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, 55 கடைகளுக்கான டெண்டரையும் தமிழக அரசு கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
ட்விட்டர் அஞ்சல்
பட்டாசு கடைகள்
#JustIn | தீபாவளியை முன்னிட்டு அக்.29 - நவ.12 வரை சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் அறிவிப்பு!#SunNews | #Deepavali2023 | #Chennai pic.twitter.com/Jj78xMbnva
— Sun News (@sunnewstamil) August 23, 2023