மும்பை விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து! டெர்மினல் 1-இல் சூழ்ந்த கரும்புகை
எழுதியவர்
Venkatalakshmi V
Apr 09, 2026
08:52 pm
செய்தி முன்னோட்டம்
வியாழக்கிழமை மாலை மும்பை விமான நிலையத்தின் டெர்மினல் 1-இல் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக விமான நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மின்கசிவு (Short circuit) காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலை சுமார் 6:35 மணியளவில் தீ விபத்து குறித்த தகவல் தீயணைப்புத் துறைக்கு எட்டியது. மும்பை தீயணைப்புப் படை (MFB) இரவு 7:05 மணியளவில் இதனை 'லெவல்-1' வகை தீ விபத்தாக அறிவித்தது. விமான நிலைய வளாகத்தில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில் தீ பரவியது. சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில் டெர்மினல் 1-க்குள் அடர்ந்த புகை சூழ்ந்திருப்பதை காண முடிந்தது. இந்த விபத்தில் இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Fire at Mumbai Airport, Terminal 1.pic.twitter.com/SB3SSmEU3f
— News Arena India (@NewsArenaIndia) April 9, 2026