Page Loader
திருவள்ளூர் - டயர் உதிரிப்பாக தயாரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து
திருவள்ளூர் - டயர் உதிரிப்பாக தயாரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து

திருவள்ளூர் - டயர் உதிரிப்பாக தயாரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து

எழுதியவர் Nivetha P
Jul 29, 2023
02:21 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மாநிலம் திருவள்ளூர் பூண்டி பகுதியருகே ஓர் பிரபல டயர் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று(ஜூலை.,29)காலை 10.30 மணியளவில் இயந்திரப்பகுதியில் ஏற்பட்ட மின்க்கசிவு காரணமாக தீப்பற்றியுள்ளது. அந்த தீயானது மளமளவென பற்றி எரிந்து பரவ துவங்கியது. இதுகுறித்து தகவலளிக்கப்பட்டதன் பேரில், அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீயானது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீவிபத்தில் ரூ.80 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. இந்த விபத்திற்கு காரணம் மின்கசிவு தான் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை, விசாரணையினை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

இந்த தீவிபத்தில் ரூ.80 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின