Page Loader
மதுரை சரவணா ஸ்டோர்ஸில் திடீர் தீ விபத்து - ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல்
மதுரை சரவணா ஸ்டோர்ஸில் திடீர் தீ விபத்து - ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல்

மதுரை சரவணா ஸ்டோர்ஸில் திடீர் தீ விபத்து - ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல்

எழுதியவர் Nivetha P
Mar 01, 2023
09:05 pm

செய்தி முன்னோட்டம்

மதுரை மாட்டுத்தாவணி பேருந்துநிலையம் அருகே லேக் ஏரியாவில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிதாக சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் வணிக கட்டிடம் கடந்த டிசம்பர் மாதம் 5ம்தேதி திறக்கப்பட்டது. 10மாடிகள் கொண்ட இந்த வணிகவளாகத்தில் 5 ஆயிரம் வண்டிகள் நிறுத்த வசதியான பார்க்கிங், ஜவுளி கடை, நகை கடை, உணவகம் என அனைத்தும் உள்ளன. இந்நிலையில் இதன் 9ம்தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது சிறிது நேரத்தில் பெருமளவில் பரவி மளமளவென எரிந்தது. இதனை கண்ட வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அலறியடித்து கொண்டு ஓடியுள்ளனர். இதில் 3 ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயினை கட்டுக்குள் கொண்டுவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

மதுரை சரவணா ஸ்டோர்ஸில் திடீர் தீ விபத்து - ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல்